கனடா நோக்கி வரும் இலங்கையர்…டிரம்ப் அதிரடி

அண்மைக்காலமாக இலங்கையர்கள் கனடாவை நோக்கி நகர்வதாக தெரிவிக்கப்படுகிறது.

சட்டவிரோத குடியேறிகள் தொடர்பில் அமெரிக்காவில் இறுக்கமான சட்டங்கள் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள சட்டவிரோதமாக தங்கியுள்ள இலங்கையர்கள் கனடாவை நோக்கி நகர்வதாக கனடாவின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சட்ட விரோத குடியேறிகளுக்கு எதிராக இறுக்கமான சட்டத்திட்டங்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி பலர் தேடுதல் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டு முகாம்களில் அடைக்கப்படுவதுடன், நாடுகடத்தலுக்கும் உள்ளாகின்றனர்.

இந்தநிலையில் ஆவணங்கள் இன்றி அமெரிக்காவில் தங்கியுள்ள இலங்கையர்கள் பலர், கடந்த தினங்களில் கனடாவை நோக்கி நகர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

Sharing is caring!