கனமழை நாகை, புதுக்கோட்டையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை

சென்னை:
கனமழையால் நாகை, புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை நேற்று துவங்கியதை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
இதில் நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நேற்று இரவு முழுவதும் விடிய விடிய கனமழை பெய்துள்ளது.

இதன் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
கும்பகோணத்தில் கனமழை காரணமாக தனியார் பள்ளிகள் மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!