கனமழை நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

ஊட்டி:
நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. காரணம் கனமழைதான்.

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்திலுள்ள 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று (16ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி, குந்தா, பந்தலூர் மற்றும் கூடலூர் தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கோவை மாவட்டம் வால்பாறையில் தொடர் மழை பெய்து வருகிறது. வால்பாறை பொள்ளாச்சி ரோட்டில் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!