கனமழை பெய்யலாம்… பெய்யலாம்… இந்திய வானிலை மையம் அறிவிப்பு

புதுடில்லி:
கனமழை பெய்யலாம்… பெய்யலாம் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இன்று 4ம் தேதி, 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை மையம் இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வடகிழக்கு பருவமழை துவங்கி உள்ளதாலும், தெற்கு அந்தமான் கடல் பகுதி மற்றும் தெற்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியாலும் தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவின் பெரும்பாலான இடங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளிலும் தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!