கனமழை பெய்யலாம்… பெய்யலாம்… வானிலை மையம் அறிவிப்பு

சென்னை:
கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது… உள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்றதால், கோவை, நெல்லை, தேனி, திண்டுக்கல், நீலகிரியில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்சமாக கோவை மாவட்டம், சின்னகல்லாரில் 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு திசையில் மணிக்கு 35 – 60 கி.மீ., வேகத்தில் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!