கனேடிய உயர் ஆணையாளர் – இராணுவ தளபதி சந்திப்பு
இலங்கைக்கான கனேடிய உயர் ஆணையாளரான எச்.ஈ டேவிட் மெக்கினன் இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயகவை சந்தித்தார்.
இராணுவ தலைமையக அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இராணுவ தலைமையகத்திற்கு வருகை தந்த கனேடிய உயர் ஆணையாளர் குழுவினiர் இராணுவ சேவை செயலாளர் மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க வரவேற்றார்.
இச்சந்திப்பில் யுத்தத்திற்கு பின்னரான பாதுகாப்பு மற்றும் நல்லிணக்க செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையினரின் சமூக பொறுப்புணர்வு மற்றும் சமூகங்களில் சமரச நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடினர்.
சந்திப்பின் முடிவில் இருவருக்கும் இடையில் நினைவு சின்னங்கள் பரிமாறப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இராணுவ தலைமையகத்திலிருந்து புறப்படுவதற்கு முன்பு கனேடிய உயர் ஸ்தானிகர் விருந்தினரின் புத்தகத்தை கையொப்பமிட்டார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S