கம்மம் மாவட்டத்தில் ராகுல், சந்திரபாபு நாயுடு ஒரே மேடையில் பிரசாரம்

ஐதராபாத்:
ஒரே மேடையில் காங்., தலைவர் ராகுலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவும் தேர்தல் பிரசாரம் செய்தனர்.

தெலுங்கானா மாநில சட்டசபைக்கு டிச. 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்., கட்சியுடன் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி வைத்துள்ளது.

இந்நிலையில், கம்மம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் காங். தலைவர் ராகுலும், தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல் மந்திரியுமான சந்திரபாபு நாயுடுவும் ஒரே மேடையில் பங்கேற்று பிரசாரம் செய்தனர்.

அப்போது சந்திரபாபுநாயுடு பேசுகையில், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதாக கூறிய பிரதமர் மோடி தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. சி.பி.ஐ. மற்றும் ஆர்.பி.ஐ போன்ற அமைப்புகளை மோடி அரசு அழிக்க முயற்சித்து வருகிறது என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!