கருணாநிதிக்கு பாரத ரத்னா… திமுக எம்பிக்கள் வலியுறுத்தல்

புதுடில்லி:
பாரத ரத்னா விருது கொடுக்கணும் என்று திமுக எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என ராஜ்யசபாவில் திமுக எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக திமுக ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா பேசுகையில், கருணாநிதி 30 ஆண்டுகள் பொது வாழ்விலும், 50 ஆண்டுகள் திமுக தலைவராக பதவி வகித்துள்ளதாக கூறினார். இந்த கோரிக்கைக்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆதரவு தெரவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!