கருணாநிதியின் கல்லறை வாசகம் தயார்

தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே கருணாநிதி தனது கல்லறையில் ஒரு வாசகத்தை எழுதச் சொல்லி உத்தரவிட்டு இருந்தார். அந்த வாசகம்தான் அவரது கல்லறையில் இடம்பெறப்போகிறது.

திரையுலகிற்கும் அரசியலுக்கும் பிணைப்பை ஏற்பத்தியவர் கருணாநிதி. இன்றைய நிலையில், சினிமாவையும், அரசியலையும் பிரித்துப்பார்க்க இயலாத நிலைக்கு அடிக்கொலிட்டவர் கருணாநிதி. இரு துறைகளிலும் அவரது பெயரை தவிர்த்து விட முடியாது. அரசியல்வாதியாக அவர் மீது பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அரசியலில் ஒருவரை மக்கள் தோற்கவிடவே இல்லை.

எப்போதும் தங்களுடைய பிரதிநிதியாகவே அவரைப் பார்க்க ஆசைப்படுகிறார்கள் என்பதற்கு கருணாநிதியே சிறந்த உதாரணம். கடந்த 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்ட அவர் ஒரு தேர்தலில்கூட தோல்வியை தழுவவில்லை. அவரது தொடர் வெற்றிக்கு காரணம் அவரது யராத உழைப்பு. அரசியலில் மட்டுமல்ல, சினிமா வசனகர்த்தா, நாடக இயக்குநர், எழுத்தாளர், பத்திரிகை ஆசிரியர் என பன்முகங்களை கொண்டு ஓய்வே அறியாதவர்.

60 ஆண்டு தமிழ்நாட்டு அரசியலை அவர் சுழற்றி வைக்க காரணம், நேரங்காலம் பார்க்காத அயராத உழைப்பு. ‘எதையும் தாங்கும் இதயம் இங்கு உறங்குகிறது’ என்று அண்ணாவின் கல்லறையில் எழுதிய கருணாநிதி, ‘ஓயாது உழைப்பவன் இங்கே உறங்குகிறான் என்று எனது கல்லறையில் எழுதுங்கள்’ என்று முன்பே உத்தரவு போட்டுவிட்டுருந்தார். இந்த வாசகம்தான் அவரது கல்லறையில் இடம்பெறப்போகிறது.

Sharing is caring!