கருணாநிதியை சந்திக்க 5ம் தேதி சென்னை வர்றார் ஜனாதிபதி
சென்னை:
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியை பார்க்க வரும் 5ம் தேதி ஜனாதிபதி சென்னை வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 5ம் தேதி சென்னை வர உள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.
துணை ஜனாதிபதி வெங்கையா, மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா, முதல்வர் பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் மருத்துவமனைக்கு வந்து அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றனர்.
துணை ஜனாதிபதி, முதல்வர் பழனிசாமி, காங்., தலைவர் ராகுல் ஆகியோர் கருணாநிதியை நேரில் பார்த்தனர். இந்நிலையில், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வரும் 5ம் தேதி சென்னை வர உள்ளார். அவர் காவேரி மருத்துவமனைக்கு சென்று கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரிக்க உள்ளார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி