கருணாநிதியை பார்க்க திருக்குவளையிலிருந்து தனியாக வந்த மூதாட்டி

சென்னை:
உடல்நிலை சரியில்லை என்று தெரிந்ததால் திருக்குவளையிலிருந்து தனியாக மூதாட்டி ஒருவர் கருணாநிதியை பார்க்க சென்னை வந்துள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு காரணமாக உடல்நிலை சரியில்லை என காவேரி மருத்துவமனை செய்தி வெளியிட்டது. தொடர்ந்து துணைமுதல்வர், அதிமுக அமைச்சர்கள் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களும், திரைப்படத்துறையினரும் கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க அவரது கோபலபுர இல்லத்திற்கு சென்று வருகின்றனர்.

இந்நிலையில் கருணாநிதியை பார்க்க திருகுவளையிலிருந்து தனியாக மூதாட்டி ஒருவர் கோபலபுரத்திற்கு வந்துள்ளார். அந்த மூதாட்டியின் பெயர் ரத்தினம்பாள் (85). அவரது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது கருணாநிதி தானாம்.

அவருக்கு உடல்நிலை சரியில்லா செய்தி அறிந்து சென்னை வந்ததாக கூறியுள்ளார். மேலும் கருணாநிதியை ஒரு முறையாவது பார்க்க வேண்டுமென மனது துடிப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்த செய்தியை கேள்விப்பட்டு அவரை கோபாலபுர இல்லத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து திரும்பிய மூதாட்டி, கருணாநிதி தீவிர மருத்துவ சிகிச்சையால் இருப்பதால் அவரை பார்க்க முடியவில்லை. ஸ்டாலினிடம் அவர் உடல்நிலை குறித்து கேட்டு அறிந்தேன் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!