கருணாநிதி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மக்கள் அஞ்சலி

சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் திரளான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஸ்டாலின் மற்றும் திமுக நிர்வாகிகளும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

மெரினாவில் உள்ள அண்ணா சதுக்கத்தில் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று கனமழை பெய்தது. இருந்தும் மழையை பொருட்படுத்தாமல் ஏராளமான பொது மக்களும், கட்சி தொண்டர்களும் இரவு முழுவதும் கருணாநிதியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து 2வது நாளாக இன்றும் காலை முதல் கருணாநிதி நினைவிடத்தில் ஏராளமான மக்கள் குவிந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!