கருணாநிதி உடல்நிலை… காவேரி மருத்துவமனை அறிக்கை

சென்னை:
ரத்த அழுத்தம் சீராக உள்ளது என்று கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு சிறுநீரக பாதையில் ஏற்பட்டிருக்கும் தொற்று காரணமாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார்.

தொடர்ந்து அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால் கோபலபுரத்தில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு தீவிர கண்காணிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதையடுத்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நிருபர்களிடம் கூறியதாவது;

கருணாநிதிக்கு திடீரென ஏற்பட்ட ரத்த அழுத்தம் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் தற்போது நலமாக உள்ளார். கருணாநிதியின் உடலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றார்.

இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதிக்கு ரத்த அழுத்தம் சீராக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. காவேரி மருத்துவமனை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கருணாநிதியின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் காவேரி மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அரவிந்தன் செல்வராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை சீராக உள்ளது என்ற காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானதையடுத்து மருத்துவமனைக்கு வெளியே காத்திருந்த தொண்டர்கள் உற்சாகம் அடைந்தனர். காவேரி மருத்துவமனையைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!