கருணாநிதி உடல்நிலை… தமிழகம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை:
முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் காவல் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2 வருடங்களாக வயது முதிர்வு மற்றும் உடல் நிலை கோளாறு காரணமாக ஓய்வில் இருப்பதால் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார்.

இந்நிலையில் அவரின் உடல் நிலையில் நேற்று முன்தினம் இரவு வெகுவாக பாதிக்கப்பட்டது. தொடர்ந்து காவேரி மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் கோபாலபுரம் இல்லம் சென்று அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருக்கு காய்ச்சல் மற்றும் சீறுநீரக தொற்று ஏற்பட்டிருப்பதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரை சந்திக்க தொண்டர்கள் யாரும் வர வேண்டாம் எனவும் கேட்டுகொள்ளப்பட்டது.

பல அரசியல் கட்சி தலைவர்களும் ஸ்டாலினை சந்தித்தனர். கருணாநிதியின் உடல்நிலை முன்னேற்றம் கண்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் சென்னை தலைமைச் செயலகத்தில் அண்ணா சமாதி தொடர்பான கோப்புகள் ஆராயப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்ணா சமாதியின் பின்புறம் உள்ள பகுதி ஆராயப்பட்டதாம்.
இதேபோல ராஜாஜி ஹால் பகுதியிலும் சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கவனத்துடன் இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளனராம்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!