கருணாநிதி கட்சி தலைமை பொறுப்பேற்பு ஏற்று 50வது ஆண்டு

சென்னை:
இந்தியாவிலேயே கட்சி தலைமை பொறுப்பேற்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் முதல் தலைவர் என்ற பெருமையை கருணாநிதி பெற்றுள்ளார்.

திமுக தலைவராக கருணாநிதி பொறுப்பேற்று 50-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். 1969ம் ஆண்டில் திமுக தலைவராக பொறுப்பேற்ற கருணாநிதி 49 ஆண்டுகளை நிறைவு செய்து கட்சியின் தலைவராக இன்று 50வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.

இதையொட்டி திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், இரு மாபெரும் மக்கள் இயக்கத்தின் தலைவராக பொன்விழா காணும் வாய்ப்பு இந்திய அரசியல் வரலாற்றிலேயே கருணாநிதிக்கே வாய்த்துள்ளது.

கருணாநிதியின் நெஞ்சில் திமுகவின் ஒவ்வொரு உடன்பிறப்பும் இருப்பதாகவும் ஒவ்வொரு உடன்பிறப்பின் நெஞ்சிலும் கருணாநிதி இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கருணாநிதியின் தலைமைப் பொறுப்பின் பொன் விழாவைப் போற்றிக் கொண்டாட அழைப்பு விடுத்துள்ள அவர், கருணாநிதியின் லட்சியப் பாதையில் ஜனநாயக வழியில் தொடர்ந்து தொண்டாற்றி, திமுக அரசை விரைவில் அமைப்போம் எனவும் அந்த வெற்றியை கருணாநிதிக்கு காணிக்கையாக்குவோம் என்றும் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!