கருணாநிதி நலம் பெற்று திரும்புவார்… தேவகவுடா சொல்றார்

சென்னை:
கருணாநிதி நலம் பெற்று திரும்புவார் என்று மாஜி பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார்.

தி.மு.க., தலைவர் கருணாநிதி நலம் குறித்து முன்னாள் பிரதமர் தேவகவுடா விசாரித்தறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

கருணாநிதி ஒரு மூத்த அரசியல் தலைவர் ஆவார். கடவுளின் அருளால் நல்ல முன்னேற்றம் உள்ளது. இந்த நாட்டிற்கு அவர் ஆற்றிய சேவை பாராட்டுதலுக்குரியது. மறக்க முடியாது. வாஜ்பாய், மன்மோகன்சிங் ஆட்சி அமைய முக்கிய பங்கு வகித்தார். அவர் இன்னும் நலம் பெற்று நூறு வயதை தொடுவார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!