கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும்

கருணாநிதி பிறந்தநாள் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு விழுப்புரத்தில் திமுக சார்பில் முப்பெரும் விழா நடந்தது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,‘‘ கருணாநிதி பிறந்தநாளை செம்மொழி நாளாக கொண்டாடுவோம். ‘

முத்தமிழ் கலைஞர்’ என்ற அறக்கட்டளையும் தொடங்கப்படும். அறக்கட்டளை சார்பில் குடிமைப்பணி பயிற்சி மையமும் நடத்தப்படும். நோயாளிகள் சிகிச்சை பெற நிதியுதவி வழங்கப்படும்.

மத்திய பாஜக அரசால் அதிகமாக பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. நாட்டில் வறுமை ஒழிந்துவிட்டதா? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து விட்டதா? என்பதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும்’’என்றார்.

Sharing is caring!