கருணாநிதி – ஸ்டாலின் ஒப்பிட முடியாது… பொன்.ராதாகிருஷ்ணன் சொல்றார்
சென்னை:
ஒப்பிட முடியாது… முடியாது கருணாநிதியுடன் ஸ்டாலினை என்று சொல்லியிருக்கிறார் மத்திய இணை அமைச்சர்.
கருணாநிதியின் ஆளுமையுடன் ஸ்டாலினின் முன்மொழிவை ஒப்பிடமுடியாது என மத்திய இணை அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்மொழிந்தது தி.மு.க.வின் 2-ம் கட்ட தலைவர்களுக்கு கூட தெரியாது. சிலை திறப்பு விழாவுக்கு அழைத்து கழுத்து அறுத்ததை போல் உணருகிறார்கள் . சீக்கியர்களை கொன்ற காங்கிரசுக்கு தான் ஸ்டாலினின் சாடிஸ்ட் வார்த்தை பொருந்தும்.
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்த போது நாராயணசாமியை தவிர வேறு யாரும் கை தட்டவில்லை. கருணாநிதியின் ஆளுமையுடன் ஸ்டாலினின் முன்மொழிவை ஒப்பிடமுடியாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S