கரூரில் இன்று பிரமாண்ட விழா… ஆதரவாளர்கள் 30 ஆயிரம் பேரை திமுகவில் இணைக்கும் செந்தில்பாலாஜி

கரூர்:
பிரமாண்ட விழாவை நடத்தி தன் ஆதரவாளர்கள் 30 ஆயிரம் பேரை திமுகவில் சேர்க்க ஏற்பாடுகள் செய்து வருகிறார் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி.

சமீபத்தில் திமுகவில் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஆதரவாளர்கள் திமுகவில் சேரும் நிகழ்ச்சி இன்று கரூரில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை செந்தில்பாலாஜி தரப்பினர் பிரமாண்டமாக மேற்கொண்டுள்ளனர்.

கரூர் நகர் முழுவதிலும் திமுக கொடிகள் மற்றும்  தோரணங்களால் நிரம்பி வழிகிறது.  விழா நடைபெறும் ராயனூர் பகுதியில் 10 ஏக்கரில் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பிரமாண்டமாக சென்னை அண்ணா அறிவாலயம் முகப்பு தோற்றத்தில் மேடை அமைக்கப்பட்டு உள்ளது.

கரூரில் இருந்து ராயனூர் செல்லும் ஸ்டாலின் மேடைக்கு செல்ல சிறப்பு ஏற்படாக தார் ரோடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. வழிநெடுங்கிலும் வாழை மரம் கட்டப்பட்டுள்ளது. இதில் சிறப்பு அம்சமாக திமுகவில் சேரும் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களுக்கு மட்டுமே சேர்கள் போடப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கோவையில் இருந்து ஸ்டாலின் கரூர் வருகிறார். நகரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இன்று மாலை 4.30 மணிக்கு துவங்கும் விழா ஸ்டாலின் பேருரையுடன் 6 மணிக்கு நிறைவடைகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!