கற்பனை கூட்டணி… பாஜ ஹெச். ராஜா திட்டவட்டம்

சென்னை:
கற்பனை… கற்பனை… அது கற்பனை கூட்டணி என்று பாஜ. ஹெச். ராஜா தெரிவித்துள்ளார்.

2019ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக மற்றும் ரஜினி கட்சி கூட்டணி சேரும் என்று கூறப்பட்டது. ஆனால் இதற்கு ரஜினி ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் திமுக, அதிமுக இல்லாத ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்று பாஜவிடம் தெரிவித்ததாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில்தான் அமித்ஷா சென்னை வந்தபோது தமிழக அரசையும் தாக்கி பேசியதாக கூறப்பட்டது. இதனால் வரும் தேர்தலில் ரஜினி கட்சி, பாஜமற்றும் சில கட்சிகள் கூட்டணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது.

அதேபோல் காங்கிரஸ், கமல் கட்சி மற்றும் சில கட்சிகள் கூட்டணி அமைக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த முறை அதிமுக, திமுக இரு கட்சிகளும் தேசிய கட்சிகளின் கூட்டணி இல்லாமல் போட்டியிடும் என்றும் அரசியல் வட்டாரங்களில் செய்திகள் உலா வந்தது. இந்நிலையில் சென்னை நிருபர்களிடம் பா.ஜ.. தேசியக்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறுகையில், அமித்ஷா தமது பேச்சில் எந்த கட்சியையும் குறிப்பிட்டு பேசவில்லை. ரஜினியுடன் பா.ஜ. கூட்டணி வைக்கும் என்பது கற்பனை. தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!