கலைஞர் மு. கருணாநிதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை

திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முன்னாள் தலைவருமான கலைஞர் மு. கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணி அளவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவருகிறது.

சிறுநீரக நோய்த்தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு நாள்களாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி தொடர் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் சேர்க்கும் முடிவை மருத்துவ சிறப்புக் குழுவினர் மேற்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கருணாநிதிக்கு சிகிச்சைஅளித்து வரும் ஆழ்வார்ப்பேட்டை காவேரி மருத்துவமனையிலிருந்து அம்புலன்ஸ் மூலம் காவேரி மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அதிகாலை 1.15 மணிக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். இதுவரை காவேரி மருத்துவமனையில் நான்கு முறை அனுமதிக்கப்பட்டபோதும்கூடஇ அவரது உடல் மிகவும் நலிவுற்றிருப்பதால் தற்போதுதான் முதல் முறையாக அம்புலன்ஸில் அவர் அழைத்துச் செல்லப்பட்டார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

Sharing is caring!