கல்லணை கால்வாயில் உடைப்பு… 2 ஆயிரம் தரிசு வயலில் கடல்போல் தண்ணீர் தேக்கம்

தஞ்சை:
தஞ்சை மாவட்டம் கல்விராயன் பேட்டை அருகே கல்லணை கால்வாயில் ஏற்பட்ட உடைப்பால் 2 ஆயிரம் ஏக்கர் தரிசு வயலில் தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சியளிக்கிறது.

தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டை கல்லணை கால்வாயில் கரை உடைந்ததால் 2 ஆயிரம் ஏக்கர் தரிசு வயலில் கடல் போல் தண்ணீர் தேங்கியுள்ளது. கல்லணையிலிருந்து பிரியும் கல்லணை கால்வாய் 60 கிலோ மீட்டர் துாரத்திற்கு சென்று 2 லட்சம் ஏக்கர் பாசனத்திற்காகவும் , குடிநீர் ஆதாரமாக பயன்படுகிறது.

22 ம் தேதி கல்லணையிலிருந்து பாசனத்திற்காக கல்லணை கால்வாய், வெண்ணாறு, வெட்டாறு, காவிரி ஆறுகளில் தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணை கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் 24ம் தேதி மாலை கல்விராயன்பேட்டைக்கு வழியாக தஞ்சைக்குள் வந்தது.

கல்லணை கால்வாயில் நேற்று முன் தினம் முதல் அதிகளவில் தண்ணீர் வரத்து இருந்தது. இந்நிலையில் தஞ்சையை அடுத்த கல்விராயன்பேட்டை கிராமம் கோனாவாரி பாலம் அருகில் கல்லணை கால்வாயில் தென்கரையில் 20 அடி அகலத்தில் உடைத்து கொண்டு தண்ணீர் வெளியேறியது.

இதனால் அப்பகுதியிலுள்ள 2 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலத்தில் தண்ணீர் கடல் போல் தேங்கியது. தகவலறிந்த எஸ்பி செந்தில்குமார், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன், சிறப்பு தலைமை பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர் சுந்தர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

பேரிடர் மேலாண்மை பயிற்சி பெற்ற போலீசார்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!