கல்வி கற்பிப்பதற்கான உரிமம் உடனடியாக நீக்கப்படும்
ஒன்ராறியோவில் மாணவர்கள் அல்லது குழந்தை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கண்டறிந்தால் ஆசிரியலர்களின் கல்வி கற்பிப்பதற்கான உரிமம் உடனடியாக நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயம் தொடர்பிலான புதிய சட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளதாக ஒன்ராறியோ கல்வி அமைச்சர் லிசா தாம்சன் நேற்று (வியாழக்கிழமை) தெரிவித்துள்ளார்.
ஒன்ராறியோ கல்லூரி ஆசிரியர்களின் ஒழுங்கு நிலைகளைக் பேணும் வகையில் கல்வி அமைச்சர் லிசா தாம்சன் பாதுகாப்பான மற்றும் துணைபுரியும் சட்டத்தை தாக்கல் செய்தார்.
இந்நிலையில் அந்த சட்டத்தை மீறி, பாலியல் துஷ்பிரயோகம் அல்லது குழந்தை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் சம்பந்தப்பட்ட தொழில் ரீதியான தவறான நடத்தைகளில் ஈடுபட்டால், அவர்களின் கல்வி பதிவு செய்யும் சான்றிதழ் திரும்ப பெறப்படும் எனவும் கூறினார்.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S