கள்ள நோட்டுக்கள் கடத்தி வருவது குறைந்தது… அதிகாரி பெருமிதம்

புதுடில்லி:
கடத்தி வருவது குறைந்துள்ளது… குறைந்துள்ளது என்று எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் தெரிவித்துள்ளார். எதற்காக தெரியுங்களா?

இதுகுறித்து டில்லியில் நிருபர்களிடம் எல்லை பாதுகாப்பு படை இயக்குனர் கே.கே.சர்மா கூறியதாவது:

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு கள்ள நோட்டுக்கள் கடத்தி வரப்படுவது குறைந்துள்ளது. அவற்றின் தரம் மிக குறைந்து இருப்பதால் எளிதில் கண்டுபிடிக்க முடியும்.

பெரும்பாலும் வங்கதேச எல்லைப் பகுதியையே இவர்கள் கள்ள நோட்டுக்களை கடத்தி வர பயன்படுத்துகிறார்கள். இந்த ஆண்டு ரூ.11 லட்சம் கள்ள நோட்டுக்கள் மட்டுமே பிடிபட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!