கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம்… வைகோ உட்பட 687 பேர் மீது வழக்குப்பதிவு
சென்னை:
கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட வைகோ உட்பட 687 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடந்த 3ம் தேதி கவர்னர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.
இதில், வைகோ, திருமாவளவன், முத்தரசன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறு, தடையை மீறி போராட்டம் நடத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளில் வைகோ உள்ளிட்ட 687 பேர் மீது சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S