காங்கிரசால் எங்களை வெல்ல முடியாது… பிரதமர் மோடி சூளுரை

ஜோத்பூர்:
மக்களுக்காக பணியாற்றாமல் தேர்தலில் வெற்றி பெற காங்., நினைக்கிறது. காங்கிரஸ் வளர்ச்சி பணிகள் குறித்து பேசுவது இல்லை. ராஜஸ்தானில் காங்கிரசால் எங்களை வெல்ல முடியாது என்று பிரதமர் மோடி சூளுரைத்துள்ளார்.

ராஜஸ்தான் சட்டசபை தேர்தல் பிரசார சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் ஜோத்பூரில் இறுதி கட்ட தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தன் மீதான தனிப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:

காங்.,கிற்கு வளர்ச்சியில் நம்பிக்கையில்லை. பொய்களை பரப்பி ஓட்டுக்களை பெற்று விடலாம் என நினைக்கிறது. இந்து மதத்தை பற்றி எனக்கு ஏதும் தெரியாது என ராகுல் சொல்கிறார். ஆனால் காங்.,க்கு தான் இந்து மதம் பற்றி ஒன்றும் தெரியாது. மக்களுக்காக பணியாற்றாமல் தேர்தலில் வெற்றி பெற காங்., நினைக்கிறது.

காங்கிரஸ் வளர்ச்சி பணிகள் குறித்து பேசுவது இல்லை. ராஜஸ்தானில் காங்கிரசால் எங்களை வெல்ல முடியாது. எங்கள் மீது சேற்றை வீசினால் இன்னும் அதிக இடங்களில் தாமரை மலரும். இவ்வாறு அவர் பேசினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!