காங்கிரசின் குறிக்கோள் என்ன தெரியுங்களா? ராகுல் சொல்றார்

புதுடில்லி:
எங்களது குறிக்கோள் பார்லி., தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிப்பதும், இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதுமே என்று காங்., தலைவர் ராகுல் தெரிவித்தார்.

டில்லியில் நடந்த எதிர்கட்சிகள் ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் கூறியதாவது:
ஆர்.பி.ஐ., சி.பி.ஐ., தேர்தல் கமிஷன், அரசியல் சாசனம் மீதான பா.ஜ., அரசின் தலையீட்டை தடுக்க கூட்டத்தில் ஒருமித்த கருத்து எடுக்கப்பட்டது.

ஆலோசனை கூட்டத்தின்போது அறையில் எழுப்பப்பட்ட குரல்கள் நாட்டில் பா.ஜ., அரசுக்கு எதிராக எழும்பிய எதிர்ப்பின் குரல்கள். எங்களது குறிக்கோள் பார்லி., தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிப்பதும், இந்திய அரசியலமைப்பையும், நமது நிறுவனங்களையும் பாதுகாப்பதுமே.

ரிசர்வ் வங்கியில் இருப்புகளை எடுத்துக் கொள்வது என்பது நாட்டிற்கு எதிரான செயல். தனது ராஜினாமா மூலம் ரிசர்வ் வங்கியை காப்பாற்றியுள்ளார் உர்ஜித் படேல். பா.ஜ., அரசில் ரிசர்வ் வங்கி கவர்னர் நீண்ட நாட்களுக்கு நீடிக்க மாட்டார் என ஏற்கனவே கூறியிருந்தோம். இவ்வாறு ராகுல் தெரிவித்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!