காங்கிரசில் இருந்து 2 பேர் பாஜவுக்கு ஜம்ப்?

பானாஜி:
2 பேர் இங்கிருந்து அங்கு ஜம்ப் செய்ய உள்ளனர்… ஐம்ப் செய்ய உள்ளனர்… என்ன விஷயம் தெரியுங்களா?

கோவா மாநில காங். எம்.எல்.ஏ.க்கள் இருவர் பா.ஜ.வுக்கு தாவ உள்ளனர். இதற்காக நள்ளிரவில் விமானம் மூலம் டில்லி புறப்பட்டனர்.

கோவா பா.ஜ. முதல்வர் மனோகர் பாரீக்கர் சிகிச்சை முடிந்து மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். முன்னதாக நேற்று முன்தினம் டில்லி எய்ம்சில் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படலாம் என செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் கோவா மாநில காங்.எம்.எல்.ஏ.க்கள் தயானந்த் சோப்தே, சுபாஷ் ஷிரோத்கர் ஆகியோர் கோவா பா.ஜ. மாநில தலைவரும் சுகாதாரத்துறை அமைச்சருமான விஸ்ஜித் ரானேவுடன் நேற்று நள்ளிரவில் விமானம் மூலம் டில்லி சென்றனர்.

இவர்கள் இன்று பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பா.ஜ.வில் இணைய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!