காங்கிரஸ் தேர்தல் அறிக்கை லீக்… முஸ்லீம்களுக்கு அதிக வாக்குறுதி?

தராபாத்:
லீக் ஆகி உள்ளது காங்கிரஸின் தேர்தல் அறிக்கை. இதில் முஸ்லீம்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் வாக்குறுதிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.

தெலுங்கானா சட்டசபை தேர்தலுக்கான காங்., தேர்தல் அறிக்கை ‘லீக்’ ஆனது. இதில் முஸ்லிம்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கும் திட்டம் அம்பலமானது.

தெலுங்கானா மாநிலத்துக்கு வரும் டிச.,7ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. காங்., தெலுங்கு தேசம், இ.கம்யூ., தெலுங்கானா ஜன சமதி சேர்ந்து ‘மெகா’ கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. காங்., தனியாக வெளியிடவிருந்த தேர்தல் அறிக்கையின் சில அம்சங்கள் முன்னதாகவே ‘லீக்’ ஆனது.

இதில் முஸ்லிம்களுக்கு 7 சிறப்பு சலுகைகள் அளிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. மத அடிப்படையில் முஸ்லிம்களுக்கு வேலை வாய்ப்பு மறுக்கும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை.  உருது ஆசிரியர்கள் நியமனத்துக்கு சிறப்பு தேர்வுக்குழு அமைத்தல்.

மசூதி, தேவாலயங்களுக்கு இலவச மின்சாரம். தங்கி படிக்கும் வசதியுடன் முஸ்லிம் மாணவர்களுக்கு சிறப்பு பள்ளிகள்.  முஸ்லிம்களுக்கென பிரத்யேகமாக மருத்துவமனைகள்.

அரசு ஒப்பந்தங்களில் முஸ்லிம் இளைஞர்களுக்கு சிறப்பு வாய்ப்பு. ஏழை முஸ்லிம் மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதி உதவி. இப்படி வாக்குறுதிகள் இடம் பிடித்துள்ளதாம்.

இதற்கு மத்திய அமைச்சர் முக்தார் அபாஸ் நக்வி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘முஸ்லிம்களை திருப்திப்படுத்தும் செயல்’ என குறிப்பிட்டுள்ளார்.

தெலுங்கானா மாநில காங்., பொருளாளர் நாராயண ரெட்டி கூறுகையில், ‘தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருப்பதாக கூறப்படும் அம்சங்கள் கட்டுக்கதை. அறிக்கை ‘லீக்’ ஆன விவகாரம் பற்றி விசாரிக்கப்படும்’ என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!