காங்கோவில் எரிபொருள் ரயில் தடம் புரண்டதில் 33 பேர் பலி

காங்கோவில் எரிபொருள் ஏற்றிச்சென்ற ரயில்  தடம் புரண்டதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர்.

காங்கோவின் லுபும்பாஷிவிலிருந்து லுயேனாவுக்கு எரிபொருள் எண்ணெய் ஏற்றிச்சென்ற ரயிலில் ஏராளமானவர்கள் சட்ட விரோதமாகப் பயணம் செய்துள்ளனர்.

மலைப்பாங்கான இடத்தில் அந்த ரயில் தடம் புரண்டு பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

ரயில் என்ஜினுடன் 13 எண்ணெய் தாங்கிகளும் பள்ளத்தில் வீழ்ந்து தீப்பிடித்து எரிந்துள்ளன.

இந்த விபத்தில் இதுவரை 33 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

26 பேர் படுகாயமடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

மலைப்பாங்கான இடம் என்பதால் மீட்புப் பணிகள் மிக மெதுவாக இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!