காங்., தலைவர் மீது உரிமை மீறல் தீர்மானம்… பாஜ முடிவு

புதுடில்லி:
முடிவு… முடிவு… பாஜ முடிவு செய்துள்ளது. என்ன முடிவு என்று தெரியுங்களா?

காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர பா.ஜ., முடிவு செய்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் அனந்த் குமார் கூறியதாவது:

ராகுலின் நடவடிக்கை குழந்தைத்தனமானதாக உள்ளது. அவரது வயது கூடினாலும், வளர்ச்சி பெறவில்லை. முதிர்ச்சியில்லாமல் ராகுல் இருப்பது துரதிர்ஷ்டவசமானது. பொய் தகவலை கூறி, பார்லிமென்டை தவறாக வழிநடத்த முயன்ற ராகுல் மீது பா.ஜ., எம்.பி.,க்கள் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர முடிவு செய்துள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!