காங்., மூத்த தலைவர் தவான் காலமானார்… கட்சியினர் அஞ்சலி

புதுடில்லி:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.கே.தவான் காலமானார். அவருக்கு கட்சி நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.கே.தவான் காலமானார். அவருக்கு வயது 81. மாநிலங்களவை உறுப்பினராகவும் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் தனிச் செயலராகவும் அவர் பணிபுரிந்தார்.

உடல் நலிவுற்றதால் கடந்த காங்கிரஸ் காரியக் கமிட்டியில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இந்திரா காந்தி உடலில் சீக்கிய பாதுகாவலர்கள் குண்டுகளைப் பொழிந்தபோது அவருடன் இருந்தவர் தவான். இவரது மறைவுக்கு கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!