காசியை தூய்மை நகராக்க நடவடிக்கை… பிரதமர் மோடி

புதுடில்லி:
காசியை தூய்மையான ஆரோக்கியமான நகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

வாரணாசியில் நமோ ஆப் மூலம் பா.ஜ., தொண்டர்களிடையே பேசிய பிரதமர் மோடி, சுகாதார காப்பீடு நாட்டிற்கு மிகவும் அவசியம். இதன் மூலம் மலிவு விலையில் உலக தர மருத்துவமனைகளை போன்று தரமான மருத்துவம் அளிக்கப்படும். விரைவில் வாரணாசியில் நவீன சுகாதார மையம் அமைக்கப்படும்.

காசி வேகமாக வளர்ந்து வரும் நகரமாகிறது. மாற்றம், நகரின் தூய்மையில் கண்கூடாக தெரிகிறது. காசியை தூய்மையான, ஆரோக்கியமான நகராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!