காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 300 பேர்… பரபரப்பு

ஆத்தூர்:
காட்டாற்று வெள்ளத்தில் 300 பேர் சிக்கிக் கொண்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே கல்வராயன் மலைப்பகுதியில், ஆனைவாரி நீர்வீழ்ச்சி உள்ளது. விடுமுறை தினத்தை முன்னிட்டு, 300 பேர் அங்கு சென்றனர்.

ஆனால் மழைப்பகுதியில் பெய்த மழை காரணமாக அந்த பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்வீழ்ச்சிக்கு சென்றவர்கள், திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அங்குள்ள இளைஞர்கள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

மழை காரணமாக அந்த நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்வராயன்மலையில் திடீர் வெள்ளப்பெருக்கு எதிரொலியாக இன்று (3ம் தேதி) முதல் 3 நாட்களுக்கு ஆனைவாரி நீர்வீழ்ச்சிக்கு பொதுமக்கள் செல்ல வனத்துறை தடைவிதித்துள்ளது.

மழை நீடிக்கும் பட்சத்தில் தடை மேலும் நீட்டிக்கப்படும். இவ்வாறு சேலம் மாவட்ட வன அலுவலர் பெரியசாமி தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!