காட்டுத் தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்

அமெரிக்காவின் கரோலினா மாநிலத்தில் பரவி வருகின்ற காட்டுத் தீயில் சிக்கி ஆயிரத்திற்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேநேரம், வடக்கு கரோலினாவில் கடந்த ஒருவார காலமாகப் பரவிவருகின்ற காட்டுத் தீ காரணமாக, ஆயிரக்கணக்கான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதோடு, குறைந்தது 71 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மீட்புப் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மொத்தமாக சுமார் 47,000 பேர் அங்கிருந்து வௌியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், குறித்த இடங்களுக்கு சென்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துள்ளார்.

Sharing is caring!