காண்டாமிருக வேட்டைக்கு வந்த 3 பேர் சிங்கங்களிடம் சிக்கி பலி

தென் ஆப்ரிக்காவின் கிழக்கு கேப் பகுதியில் உள்ள சிபுயா கேம் ரிசர்வ் வனப் பகுதி 30 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளது. இங்கு சிங்கங்களும், காண்டாமிருகங்களும் அதிகளவில் இருக்கிறது. வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இங்கு அதிகமாக வந்து செல்வார்கள்.

இங்குள்ள காண்டாமிருகங்களை அதன் கொம்புகளுக்காக வேட்டையாட மனிதர்கள் ஊடுறுவல் அவ்வப்போது நடக்கும். அவ்வாறு ஊடுறுவிய 3 வேட்டைக்காரர்களை சிங்கங்கள் சமீபத்தில் கடித்து இரையாக்கியிருக்கும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து ஊழியர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வேட்டை துப்பாக்கிகள், கோடாரி, சைலென்சர் உள்ளிட்ட நவீன ஆயுதங்கள் அனாதையாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் ரத்தக் கறைபடிந்த மனித எலும்புகள், 3 ஜோடி ஷூக்களும் கண்டெடுக்கப்பட்டது. இவை வேட்டைக்காரர்கள் பயன்படுத்தியதாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், வேட்டைக்காரர்கள் பதுங்கியிருக்கிறார்களா? என்பதை கண்டறிய ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டில் காண்டாமிருகங்கள், சிங்கங்களுடன் 5 யானைகள், காட்டெருமை, சிறுத்தைகளும் இருந்துள்ளது. அப்போது 3 காண்டாமிருகங்கள் அதன் கொம்புகளுக்காக வேட்டை ஆடப்பட்டது.

Sharing is caring!