காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமியால் 24 பேர் மீட்பு கலெக்டரை சஸ்பெண்ட் செய்த முதல்வர்

லக்னோ:
காப்பகத்தில் இருந்து தப்பிய சிறுமியால் 24 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இச்சம்பத்தில் அதிரடி நடவடிக்கையாக மாவட்ட கலெக்டரை முதல்வர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

உ.பி.. மாநிலம் தியோரியா மாவட்டத்தில், தனியார் தொண்டு நிறுவனம் என்ற பெயரில், பெண்கள் காப்பகம் இயங்கி வந்தது. இதில், பெண்கள், சிறுமிகள் என, 42 பேர் தங்கியிருந்தனர். இந்நிலையில், அங்கு தங்கியிருந்த, 10 வயது சிறுமி, தப்பிச் சென்று, மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தாள்.

தன்னுடன் தங்கியிருக்கும் சிறுமியர் சிலர், தினமும், மாலை நேரங்களில், காரில் அழைத்துச் செல்லப்பட்டு, அடுத்தநாள் காலை, காப்பகம் திரும்புவதாக கூறினாள். காப்பகத்தை ஆய்வு செய்து அதன் உரிமையாளர்களை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் யோகி ஆதித்யநாத், அம்மாவட்ட கலெக்டரை, ‘சஸ்பெண்ட்’ செய்தார்.

அரசு அதிகாரிகள் பலர் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காப்பகத்திலிருந்த 24 சிறுமிகள் மீட்கப்பட்டனர். அங்கு தங்கியிருந்த மேலும், 18 பேரை தேடும் பணியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!