காப்பியடித்தும் பிரயோஜனம் இல்லையே… ஜியோவையே தேடும் மக்கள்

மும்பை:
எத்தனை காப்பியடித்தாலும் பிரயோஜனம் இல்லை என்றுதான் சொல்றாங்க விபரமறிந்தவர்கள்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் நுழைந்ததும் மற்ற நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் சரிவை சந்திக்க துவங்கினர். இந்த நிலை இன்று வரை தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது.

ஆனால் ஏர்டெல் நிறுவனம் ஜியோவுக்கு போட்டியாக பல சலுகைகளை வழங்கியது. ஏற்கனவே நடைமுறையில் இருந்த சலுகைகளையும் மாற்றி அமைத்தது. இருப்பினும் எந்த பயனும் இல்லை. வாடிக்கையாளர்கள் ஜியோவையே முதல் தேர்வாக வைத்திருந்தனர்.

இதனால் ஜியோ அறிவிக்கும் சலுகைகள் போன்றே ஏர்டெல் நிறுவனமும் சலுகைகளை வழங்கியது. அதாவது ஜியோவின் சில சலுகைகளை காப்பி அடித்து புதிய சலுகைகளை அறிவித்தது.
அந்த வகையில் தற்போது ஒரு சலுகையை அறிவித்துள்ளது.

அதில் ரூ.199க்கு தினமும் 1.5 ஜிபி டேட்டா, அன்லிமிட்டெட் லோக்கல் மற்றும் எஸ்டிடி கால், தினமும் 100 எஸ்எம்ஸ், 42 ஜிபி கூடுதல் டேட்டா, நேஷனல் ரோமிங் ஆகியவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதே போன்ற சலுகையில் ரூ.198க்கு தினமும் 2 ஜிபி டேட்டா வழங்குகிறது ஜியோ.

மேலும், காலர்டியூன், மிஸ்டுகால் அலர்ட் உள்ளிட்ட பல்வேறு சலுகைகையும் இலவசமாக வழங்குகிறது. எனவே எப்படி பார்த்தாலும் ஏர்டெல் நிறுவனத்தின் சலுகைகள் ஜியோவைவிட குறைவுதான். இதனால்தான் வாடிக்கையாளர்கள் ஜியோவையே விரும்புகின்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!