காற்று மாசு அதிகரிப்பு… எய்ம்ஸ் மருத்துவமனையில் குவியும் மக்கள்

புதுடில்லி:
காற்று மாசு அதிகரித்தபடியே உள்ளதால் டில்லியில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

டில்லியில் வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை மற்றும் பனிமூட்டம் காரணமாக காற்று மாசு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகி்ன்றன.

இந்நிலையில் கடந்த நான்கு நாட்களாக காற்றுமாசினால் டில்லி நகரமே தூசு மண்டலாமாக மாறிவருகிறது. காற்று மாசினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசக்கோளாறும், மூச்சு திணறல் ஏற்பட்டதால் எய்மஸ் மருத்துவமனையில் வெளி நோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்காக அதிகளவில் மக்கள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!