கால அவகாசம் தாங்க… ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம் தமிழக அரசு கோரிக்கை

சென்னை:
கால அவகாசம் தாங்க… என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், ஜி.எஸ்.டி., வரி தாக்கல் செய்ய, கால அவகாசம் அளிக்க, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம், தமிழக அரசு அனுமதி கேட்டுள்ளது.

‘கஜா’ புயலால், கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், தேனி, சிவகங்கை, திண்டுக்கல் மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

இம்மாவட்டங்களில், ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோர், அக்டோபர் மாதத்திற்கான கணக்குகளை, தாக்கல் செய்ய முடியாமல், சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். காலதாமதம் காரணமாக, நவ., 21 முதல், தினமும், 200 ரூபாய் அபராத கட்டணம் மற்றும் வட்டி செலுத்த வேண்டி உள்ளது.

இதிலிருந்து விலக்கு அளிக்கவும், பாதிக்கப்பட்ட, 11 மாவட்டங்களில், ஜி.எஸ்.டி., வரி செலுத்துவோர், அக்டோபர் மாதத்திற்கான கணக்கை, தாமத கட்டணம் மற்றும் வட்டியில்லாமல், டிச., 20 வரை தாக்கல் செய்ய, ஜி.எஸ்.டி., கவுன்சிலிடம், அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ‘அனுமதி கிடைத்த பின், முறையாக அறிவிப்பு வெளியிடப்படும்’ என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!