காளஹஸ்தி கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக ரூ. 1.31 கோடி வசூல்

நகரி:
காளஹஸ்தி கோவிலில் 30 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.1.31 கோடி செலுத்தி உள்ளனர்.

காளஹஸ்தி கோவில் உண்டியலில் 30 நாட்களில், 1.31 கோடி ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி உள்ளனர். சித்துார் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.

பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம் 30 நாட்களில், 1.31 கோடி ரூபாய், 90 கிராம் தங்கம், 466 கிலோ வெள்ளி, 125 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்துள்ளன. இத்தகவலை கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!