காவிரியில் வரும் தண்ணீரின் அளவு 1 லட்சம் கனஅடியை தாண்டியது

பெங்களூரு:
அதிகரிப்பு… அதிகரிப்பு… தமிழகத்திற்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிப்பு. இப்போது 1 லட்சம் கனஅடியை தாண்டி உள்ளது.

கர்நாடக மாநிலம் கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளிலிருந்து 1.10 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகாவில் காவிரி நீர்ப்பிடிபபு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதனால் கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் அணைகளிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கே.ஆர்.எஸ்., அணையிலிருந்து 70,000 கனஅடியும், கபினி அணையிலிருந்து 40,000 கனஅடி நீர் திறக்கப்படுவதால் காவிரியில் 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வருகிறது.

தற்போதைய நிலவரப்படி ஒகேனக்கலுக்கு நீர்வரத்து 70,000 கனஅடியும், மேட்டூருக்கு 46,000 அடியும் வருகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 85 அடியை தாண்டியுள்ளது. குடிநீர் தேவைக்காக அணையிலிருந்து 1,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!