காவிரி ஆணையத்திற்கு கர்நாடக கட்சிகள் கடும் எதிர்ப்பு

பெங்களூரு:
காவிரி ஆணையத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

நாளை முதல் 2 ம் தேதி காவிரி ஆணையத்தில் முதல் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் குறித்து ஆலோசிப்பதற்காக கர்நாடக முதல்வர் குமாரசாமி, நேற்று அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதில், மத்திய அரசு அமைத்துள்ள காவிரி ஆணையத்திற்கு அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காவிரி விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா தாக்கல் செய்துள்ள மூல மனுவை மீண்டும் விசாரிக்கும்படி மனுத்தாக்கல் செய்யவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் வரும் 18 ம் தேதி துவங்க உள்ள பார்லி., மழைக்கால கூட்டத் தொடரின் போது கர்நாடகாவை சேர்ந்த 40 எம்.பி.,க்களும் இது தொடர்பாக பார்லி.,யில் குரல் எழுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!