காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டது வெற்றி… கமல் மகிழ்ச்சி

சென்னை:
காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி என்று கமல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நிருபர்களிடம் கூறியதாவது:

காவிரி ஆணையம் உருவாக்கப்பட்டது மிகப்பெரிய வெற்றி. இதை இரு மாநிலங்களும் தக்க வைத்து கொள்ள வேண்டும். கர்நாடக முதல்வரை சந்தித்தது திரித்து கூறப்பட்டது அரசியல் மாண்பு சீரழிந்து வருவதாக நினைக்கிறேன்.

விவசாயிகளுக்கு தண்ணீரை மட்டுமே கேட்டேன் தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டது வெறும் கண்துடைப்பு. எட்டு வழிச்சாலை திட்டம் பற்றி நான் பேசக்கூடாது என எச்.ராஜா எப்படி சொல்லலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!