காவேரி மருத்துவமனைக்கு வந்த தயாளு, ராஜாத்தியம்மாள்… கருணாநிதி உடல்நிலை பின்னடைவு?

சென்னை:
முதன்முறையாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தங்களின் கணவரை பார்க்க தயாளு மற்றும் துணைவி ராஜாத்தியம்மாள் ஆகியோர் வந்தனர். இதனால் கருணாநிதி உடல்நிலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதா என்று தொண்டர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

காவேரி மருத்துவமனையில் தொடர்ந்து, 10 வது நாளாக கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் இந்த பத்து நாளில் முதல்முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் துணைவி ராஜாத்தியம்மாள் ஆகியோர் வந்தனர்.

அவர்களுடன் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், திமுக எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆகியோரும் உடன் வந்தனர்.

கடந்த ஞாயிறன்று கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்போது தயாளு மற்றும் ராசாத்தி அம்மாள் வந்துள்ளதால் தொண்டர்கள் பரபரப்பு அடைந்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!