காஷ்மீரில் கூட்டணி உறுதி… அல்தாப் புகாரி முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டார்

ஸ்ரீநகர்:
காஷ்மீரில் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்று அம்மாநில அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

காஷ்மீரில் பிடிபி, தேசிய மாநாட்டு மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முடிவு செய்துள்ளன. பிடிபி கட்சி அல்தாப் புகாரி முதல்வர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளார்.

காஷ்மீரில் பா.ஜ., ஆதரவுடன் பி.டி.பி., எனப்படும் மக்கள் ஜனநாயக கட்சியின் மெகபூபா முப்தி முதல்வராக பதவி வகித்து வந்தார். கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஜூன் மாதம் அரசுக்கு அளித்த வந்த ஆதரவை பா.ஜ., திரும்ப பெற்று கொண்டது.

இதையடுத்து அங்கு ஜனாதிபதி ஆட்சி அமைக்கப்பட்டது. இது டிச.,19 ம் தேதியுடன் முடிவடைகிறது. 87 உறுப்பினர்களை கொண்ட காஷ்மீர் சட்டசபையில், மக்கள் ஜனநாயக கட்சிக்கு 28, தேசிய மாநாட்டு கட்சிக்கு 15, காங்கிரசுக்கு 12, பா.ஜ.,வுக்கு 25 எம்எல்ஏக்களும் உள்ளனர்.

ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்ட போதிலும் சட்டசபை இதுவரை கலைக்கப்படவில்லை. இந்நிலையில், காஷ்மீரில் மக்கள் ஜனநாயக கட்சி, தேசிய மாநாடு கட்சி, காங்கிரஸ் ஆகியவை கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன.

இதில் தேசிய மாநாட்டு கட்சி வெளியில் இருந்து ஆதரவும் முடிவு செய்தது. இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. மக்கள் ஜனநாயக கட்சியின் அல்தாப் புகாரியை முதல்வர் பதவிக்கு 3 கட்சிகளும் முன்மொழிந்துள்ளன. இதில் இறுதி முடிவு விரைவில் எடுக்கப்பட உள்ளது. கூட்டணி அமைப்பதை அல்தாப் புகாரியும் உறுதி செய்துள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பா.ஜ., எம்எல்ஏ., கவிந்தர் குப்தா, இந்த கூட்டணி பின்னணியில் பாகிஸ்தான் உள்ளது. கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தை துபாயில், பாகிஸ்தான் ஏற்பாடு செய்ததாக கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!