காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து இந்திய வீரர் மாயம்

காஷ்மீரில் சர்வதேச எல்லைப் பகுதியில் இருந்து இந்திய வீரர் மாயமாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் உள்ள சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்கள் மூலம்  தாக்குதல் நடத்தியது. இந்நிலையில், இந்த பகுதியில் இந்திய வீரர் ஒருவர் மாயமாகியுள்ளார்.

எல்லை தாண்டி துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அவர் காயமடைந்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. அவரை பாதுகாப்பாக மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Sharing is caring!