காஷ்மீரில் பதுங்கி இருந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

காஷ்மீரின் பெஹம்போரா கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தினர்.அப்போது திடீரென பதுங்கியிருந்த தீவிரவாதிகள், ராணுவத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். ராணுவ வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 2 பேர் கொல்லப்பட்டனர். இறந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும், தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருவதாகவும் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடந்த சுற்றுவட்டார பகுதிகளில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன.

Sharing is caring!