காஷ்மீரில் பிரபல தொழில பிரமுகர் வீட்டில் ரெய்டு… பயங்கரவாதத்திற்கு நிதி அளிப்பதாக புகார்

ஜம்மு:
காஷ்மீரில் பிரபல தொழில் பிரமுகர் வீட்டில் நடந்து வரும் ரெய்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் விதமாக நிதி வழங்குவதாக எழுந்த புகாரின் பேரில் காஷ்மீரில் பிரபல தொழில் பிரமுகர் வீட்டில் தேசிய புலனாய்வு படையினர் ரெய்டு நடத்தி வருகின்றனர்.

நாட்டில் சமீப காலமாக பயங்கரவாதம் மற்றும் தேச விரோத சக்திகளுக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமீபத்தில் பெங்களூருவில் உள்ள அம்னெஸ்ட்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்து.

இந்நிலையில் இன்று ஜம்முவில் பிரபல தொழில் பிரமுகர் பயாஸ் என்பவர் வீட்டில் ரெய்டு நடந்து வருகிறது. இவர் பயங்கரவாதிகள் அமைப்புக்கு நிதி வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.  இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு எழுந்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!