காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஸ்ரீநகர்:
2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காஷ்மீரில் பாதுகாப்புபடையினர் நடத்திய என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் ஹணேட்வாராவில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களிடமிருந்து
ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!